பவுலின் காலக் குறிப்புகள்
பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம்
இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே
வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர்
என்பதும்,
ரோம
அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில், பவுலோடு தொடர்பாக ரோம
அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு, ஓரளவுக்குப் பவுலின்
காலத்தைக் கணிக்கலாம்.
பவுலின்
பிறப்பு
பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும்
அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது
கடிதங்களில் இல்லை. 2கொரி 5:16 ன் அடிப்படையிலும்
கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை.
அப். 7:58, பிலமோன்
9 ஆகிய வசனங்களின்
அடிப்படையில் பவுல் கி. பி. 10க்குப் பின்னர்
பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால்
அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர்.
பிட்ஸ்மயரின் கருத்துப்படி,
ஸ்தேவானைக்
கல்லால் அடித்துக்கொன்றபோது இளைஞன் என்று குறிப்பிடப்படும் பவுலின் வயது 24 முதல் 40க்குள் இருக்கலாம்.
இந்தக் கனிப்பின் படி பவுல் கி. பி. 10க்கு
முன் பிறந்திருக்கவேண்டும். ஆனால் சிலர் பவுல் கி. பி. 3முதல் 10க்குள் பிறந்திருக்கலாம்
என்கிறார்கள். எப்படியும் பவுல் முதல் நூற்றாண்டின் முதல் பதிகத்தில் (Decade) பிறந்திருக்கிறார் என்பது
தெளிவு.
Comments
Post a Comment