எருசலேமிலிருந்து தப்பி பவுல் சீரியா , சிலிசியா பகுதிகளுக்குச் சென்றார் (கலா. 1:21-22). இப்பகுதியை பவுல் அடைந்தது கி. பி. 40 ல் , இங்கு நற்செய்திப் பணியாற்றியதோடு , பல ஆண்டுகள் தங்கியுமிருந்தார். ஏறத்தாழ 5 ஆண்டுகள் கி. பி. 40 முதல் 45 வரை இப்பகுதிகளில் தங்கிப் பணியாற்றினார். 2 கொ. 11:25 முதல் உள்ளவசனங்களில் காணப்படும் பாடுகளில் ஒரு சிலவற்றையாவது பவுல் இங்கு அனுபவித்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு. அதன்பின் தனது இருப்பிடமாகிய தர்சு நகரம் சென்றார். பவுல் தாய்ச்சபையோடு செலவிட்ட நாட்கள் மிகக் கொஞ்சம். தர்சுவில் இருந்த போதும் பவுல் நற்செய்திப்பணி செய்தார். 2 கொ. 12:2-4 ல் உள்ள திருக்காட்சியும் , வெளிப்பாடும் பவுலுக்கு இக்காலத்தில் கிடைத்திருக்கலாம். பவுல் இங்கிருக்கையில் தான் பர்னபாபவுலைத் தேடி தர்சு நகர் வந்தார். இங்கு பவுலைக்கண்டு. அந்தியோகியாவுக்கு அவரை அழைத்து வந்து திருச்சபை மக்களுடன் ஓராண்டு காலம் இருவரும் சேர்ந்து திருப்பணி ஆற்றினார்கள் (அப். 11:25-26).
தமஸ்குவில் தங்கிய பின் பவுல் முதல் முறையாக எருசலேம் நோக்கிச் சென்றார். அங்கு பேதுருவை சந்திப்பதற்காகச் செல்கின்றார். அவருடன் 15 நாட்கள் தங்கி இருந்தார். இக்காலத்தில் எருசலேமில் ஆண்டவரின் சகோதரனாகிய யாக்கோபுவைத் தவிர அப்போஸ்தலர்களில் வேறு எவரையும் சந்திக்கவில்லை என்கிறார் (கலா. 1:18; அப். 9:26). பவுல் எருசலேமில் இருந்தபோது அப் 22:17 ல் சொல்லப்பட்டக் காட்சியைக் கண்டிருக்கலாம். பவுல் எருசலேமிற்குச் சென்ற காலம் கி. பி. 40 எனலாம். பவுல் இங்கிருக்கையில் அரேத்தா மன்னனின் ஆளுநர் பவுலைக் கைதியாக்கி தமஸ்கு நகரின் வாயில்களில் காவலரை வைத்திருந்தான் ( 2 கொ. 11:32). யூதர்களுக்கும் நெபத்தீய மன்னனான அரேத்தாவிற்கும் நெருக்கமான உறவு அப்போது இருந்தது. ஏரோது அந்திப்பா அரேத்தாவின் தங்கையை மணந்திருந்தார் என்று யூதச் சரித்திர ஆசிரியன் ஜோசியஸ் கூறுகின்றார். எனவே பவுலைக் கொல்லத் திட்டமிட்ட யூதர்கள் அரேத்தா மன்னனின் உதவியை நாடினார்கள் (அப். 9 23-25). அரேத்தா மன்னன் கி. பி. 34 க்குப் பின்னர் தான் தமஸ்குவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். எனவே பவுல் கி. பி. 40 ல் எருசலேமிற்கு முதல் முறையாகச் ' சென்றார் என்ற ...