பவுலின்
தமஸ்கு அனுபவத்திற்குப்பின்,
உடனே அரபி நாட்டிற்குச்
சென்றார். (கலா. 1:17)
இதுபற்றி
அப்போஸ்தலர் நடபடி.கள் நூல் எதுவும் குறிப்பிடவில்லை . பவுல் அரேபியாவில் எவ்வளவு
காலம் இருந்தார் என்ற குறிப்பை எங்கும் காணமுடியதில்லை. இருப்பினும் பவுல் இங்கு
குறுகிய காலம் இருந்தார் என்று கருதலாம். குறுகிய காலமானதால் தான் லூக்கா அதைப்
பெரிதுபடுத்தாமல் தனது நூலாகிய அப்போஸ்தல நடபடிகள் நூலில் விட்டுவிட்டார் என்று
நினைக்க இடமுண்டு.
பவுல் ஏன் அரேபியாவிற்குச் சென்றார் என்பதைப்
பற்றியும் விளக்கமான குறிப்புகள் இல்லை. ஆனால் பலர் இதைப்பற்றிப் பலவிதமான
விளக்கங்களைக் கூறுகின்றார்கள். பவுல் தனது எதிர் காலப் பணியைப் பற்றியும், அதை எவ்வாறு நிறைவேற்ற
வேண்டும் என்பதைப்பற்றியும் சிந்திப்பதற்காக அங்கு சென்றார் என்றும், அரேபியாவின் மக்களுக்கு
இயேசுவைப் பிரசங்கிக்கச் சென்றார் என்றும், நியாயப்பிரமாணம் வழங்கப்பட்ட
சீனாய் மலை அரேபியாவின் பாலைவனத்தில் இருந்ததால், நியாயப்பிரமாணம் இயேசுவில் தன்
முடிவைக் கண்டு விட்டது என்ற கருத்தைக் சொல்லுமுன், அம்மலையை ஓர் முறை காணச் சென்றார்
என்றும் பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. எந்த விளக்கம் சரியானதாக இருந்தாலும், பவுல் அரேபியாவில்
செலவிட்ட நாட்கள் பயனுள்ள முறையில் அமைந்திருக்கும் என்று மட்டும் நாம் ஐயமின்றிக்
கூறலாம்.
Comments
Post a Comment