எருசலேமிலிருந்து தப்பி பவுல் சீரியா, சிலிசியா பகுதிகளுக்குச்
சென்றார் (கலா. 1:21-22).
இப்பகுதியை
பவுல் அடைந்தது கி. பி. 40ல், இங்கு நற்செய்திப்
பணியாற்றியதோடு,
பல ஆண்டுகள்
தங்கியுமிருந்தார். ஏறத்தாழ 5 ஆண்டுகள் கி. பி. 40 முதல் 45 வரை இப்பகுதிகளில்
தங்கிப் பணியாற்றினார். 2 கொ. 11:25 முதல் உள்ளவசனங்களில்
காணப்படும் பாடுகளில் ஒரு சிலவற்றையாவது பவுல் இங்கு அனுபவித்திருக்கலாம் என்று
கருதுவதற்கு இடமுண்டு.
அதன்பின் தனது இருப்பிடமாகிய தர்சு நகரம் சென்றார்.
பவுல் தாய்ச்சபையோடு செலவிட்ட நாட்கள்
மிகக் கொஞ்சம். தர்சுவில் இருந்த போதும் பவுல் நற்செய்திப்பணி செய்தார். 2கொ. 12:2-4ல் உள்ள திருக்காட்சியும், வெளிப்பாடும் பவுலுக்கு
இக்காலத்தில் கிடைத்திருக்கலாம். பவுல் இங்கிருக்கையில் தான் பர்னபாபவுலைத் தேடி
தர்சு நகர் வந்தார். இங்கு பவுலைக்கண்டு. அந்தியோகியாவுக்கு அவரை அழைத்து வந்து
திருச்சபை மக்களுடன் ஓராண்டு காலம் இருவரும் சேர்ந்து திருப்பணி ஆற்றினார்கள்
(அப். 11:25-26).
Comments
Post a Comment