Skip to main content

யூதரல்லாதோரின் நற்செய்தித் தொண்டன் (பவுலின் நற்செய்திப் பணி)

 

தாயின் வயிற்றில் இருந்தபோதே தன்னை யூதரல்லாதோரின் அப்போஸ்தலனாகப் பணி புரிய கடவுள் திட்டமிட்டுத் தன்னைத் தெரிந்துக் கொண்டார் என்ற உள்ளுதல் பவுலுக்கு இருந்தது (கலா; ]: 15, 16). இயேசு மற்ற அப்போஸ்தலர்களுக்குக் காட்சி தந்து அவர்களைத் திருப்பணிக்காக அழைத்தது போன்றே (காண்க . மத். 28:9-10, 16-20; மாற். 16:14-18; லூக். 24:13-35, 36. 43; யோ . 20:19-29, 21:1-23, அப். 1:3-9) தனக்கும் இயேசு காட்சி தந்து, யூதரல்லாதாரிடையே நற்செய்திப் பணிபுரிய தன்னை அழைத்தார் என்று பவுல் நம்பினார்.

யூதரல்லாதாரிடம் சென்று கடவுளின் பெயரை அறிவிக்கும் கருவியாக பவுல் தன்னைக் கருதினார் (அப். 9:15; 26:18). தமஸ்கு பாதையில் அருட்செய்தியின் தொண்டனாக இருக்க அழைப்பை மட்டுமன்றி, அப்பணியை நிறைவேற்றுவதற்குரிய செய்தியும் தனக்கு அருளப்பட்டதாகப் பவுல் குறிப்பிடுகின்றார் (கலா. 1: 12:2, 7; 1 தெச 2:4; ரோ. 1:1; 15:15 1கொ . 1:17), அருட்செய்தியின் அறிவிப்பைத் தானாகத் தெரிந்து கொள்ளவில்லை, அது தன் மேல் விழுந்த கடமை, அருட்செய்தியை அறிவிக்காவிட்டால் தான் அழிந்தே போவேன் என நம்பினார் (1கொ 9:16மு. ; ரோ. 15:16) 1கொ. 3:10. 2கொ . 3:6; எபே. 3:7; 6:20; கொலோ . 1:25; 1தெச. 2:4). இவைகள் அனைத்தும் பவுலுக்கு நற்செய்தியைப்பற்றி இருந்த ஆர்வத்தையும் உணர்வையும் காட்டுகின்றது.

பவுலின் பணியை தீவிர யூதக் கிறிஸ்தவர்கள் கேலி செய்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது (கலா. 3:1) எருசலேமில் மன்றத்தைக் கூட்டி, இரு சாராரும் கூடிப் பேசி முடிவெடுத்தார்கள். இம்முடிவின்படி, யூதருக்கு நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பை பேதுருவினிடமும் யூதரல்லாதோருக்கு நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பைப் பவுலினிடமும் ஒப்படைத்தார்கள். இது சமாதான முறையிலேயே நடந்தேறியது.

திருச்சபையின் தூண்கள் என்று எண்ணப்பட்டவர்களாகிய யாக்கோபுவும். பேதுருவும், யோவானும் பவுலோடு கைகுலுக்கித் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும், சம்மதத்தையும் தெரிவித்தார்கள். ஆகவே ஆதித்திருச்சபையே பவுலை யூதரல்லாதோரின் அப்போஸ்தலனாக ஏற்றுக் கொண்டது என்பது தெளிவு (கலா: 2:7-10). 

Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள் , அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58 ல் பவுல் ஓர் வாலிபனாகவும் , பிலமோன் 9 ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும் , பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பவுல் ஒரு பரிசேயன் .  கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும் , செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு ; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16)  பவுலின் வாழ்விடம் :- பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...