Skip to main content

தமஸ்கு நிகழ்ச்சி - ஓர் ஆய்வு (பவுலின் வாழ்க்கை)

 

பவுலும், ஏனையோரும் தமஸ்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, உயிர்த்த இயேசு கிறிஸ்து பவுலைச் சந்திக்கின்றார். கிறிஸ்துவும் பவுலும் முகமுகமாய்ப் பேசிக் கொண்ட இவ்வனுபவத்தைப் பவுல் தனது கடிதங்களில் கடவுளின் வெளிப்பாடு (கலா. 1:16) என்றும், புதிய படைப்பு (2கொ. 5:17) என்றும், திருக்காட்சி (1கொ. 15:8) என்றும் விமர்சிக்கின்றார்.

பவுலின் தமஸ்கு அனுபவத்தைப்பற்றி சிலர் பல்வேறு கருத்துக்களை, ஐயங்களை எழுப்புகின்றனர்.

முதலாவது பரலோகத்திற்குச் சென்ற கிறிஸ்து பவுலுக்குக் காட்சி தந்திருக்க முடியாது என்று கூறி, பவுல் இயேசுவைச் சந்திக்கவும் இல்லை. பேசவும் இல்லை என்கின்றார்கள்.

இரண்டாவது பவுலின் தமஸ்கு அனுபவம் வெளிப்படையாக நடந்த ஒரு செயல் அன்று, அது பவுலுக்கு ஏற்பட்ட உள்ளான அனுபவம் மட்டுமே (Subjective internal rather than objective).

மூன்றாவது பவுலின் அனுபவம் உளவியல் சார்ந்தது. ஸ்தேவான் பொறுமையாக மரணத்தை ஏற்று இரத்த சாட்சியாக மரித்ததையும், கிறிஸ்தவர்கள் துன்பத்திலும் பொறுமையோடு உறுதியாய் நம்பிக்கையில் நிலைத்திருப்பதையும் கண்ட பவுல், அதை பற்றியே தனது மனதில் சிந்தித்து, ஏன் இவர்கள் இயேசு என்பவருக்காக, இத்தனை உறுதியாக இருக்கின்றார்கள் என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டே இருந்தார். இந்த சிந்தனை பவுலுக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினது. இதுவே தமஸ்கு அனுபவமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஸ்தேவானின் மேல் எறியப்பட்ட ஒவ்வொரு கல்லும் பவுலைக் கிறிஸ்தவனாக கட்டி எழுப்பியது எனலாம். ரத்தசாட்சிகளாக கிறிஸ்தவ விசுவாசிகள் மரிக்கவும் துணிந்தார்கள் என்பது பவுலின் உள்ளத்தில் ஒரு உறுத்துதலை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த அடித்தள உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு உயிர்த்தெழுந்த ஆண்டவர் அவரை தன் வயப்படுத்திக் கொண்டார் என்பதிலோ அல்லது அவ்வாறு ஏற்பட்ட மாற்றத்திற்கு ஆண்டவரின் தரிசனம் காரணமாயிருந்தது என்பதையோ நாம் சந்தேகிக்கத் தேவையில்லை . (1கொரி. 15:3-8 காண்க).

பவுலின் தமஸ்கு அனுபவம் உண்மை நிகழ்ச்சியாயிராவிட்டால், வைராக்கியமிக்க பவுலின் வாழ்வில் ஒரு பெரியமாற்றம் ஏற்பட்டிருக்காது. தமஸ்கு பாதையில் நடந்த அனுபவத்தைப் பவுல் மட்டுமல்ல, அப்போஸ்தலர் நடபடிகளின் ஆசிரியர் லூக்காவும் மும்முறை இந்நிகழ்ச்சியைத் திரும்பத் திரும்பக் கூறுகின்றார். எனவே இதை சரித்திர நிகழ்ச்சியாகக் கொள்வதே ஏற்புடையது.

பவுலின் தமஸ்கு நிகழ்ச்சி ஆதி அப்போஸ்தலர்களின் ஈஸ்டர் நிகழ்ச்சிக்கு ஒத்தாகக் கொள்ளலாம். (காண்க 1கொ. 15:8 மு; 9:1) புதிய ஏற்பாட்டில் உயிர்த்த இயேசுவைக் கடைசியாகச் சந்தித்தவர் பவுல் தான். தமஸ்கு நிகழ்ச்சி பற்றிய முழு விபரங்கள் இல்லை என்பதற்காகவோ அல்லது சொல்லப்பட்டிருக்கின்ற இந்நிகழ்ச்சியில் ஒரு சில வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பதற்காகவோ இந்நிகழ்ச்சியின் வரலாற்றுத் தன்மையைச் சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை. வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல். நிகழ்ச்சியின் மையச் செய்தியும் அடிக்கடி வலியுறுத்தப்படுவதுமான இயேசு பவுலைச் சந்தித்ததையும், பவுல் பெற்ற அழைப்பையும் எடுத்துக் கொள்வதே நலம்.

Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள் , அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58 ல் பவுல் ஓர் வாலிபனாகவும் , பிலமோன் 9 ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும் , பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பவுல் ஒரு பரிசேயன் .  கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும் , செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு ; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16)  பவுலின் வாழ்விடம் :- பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...