பவுல் திருமணமானவரா, ஆகாதவரா என்பது இன்றும் பிரச்சனையாகவே
இருக்கின்றது. பவுல் யூத ரபியாக ஆகியிருந்தால் கண்டிப்பாக அவருக்குத் திருமணமும்
ஆகியிருக்கவேண்டும். ஏனென்றால் யூத ரபி கண்டிப்பாகத் திருமணம் செய்ய வேண்டும்
என்பது யூத நியதி. மனைவி இல்லாத யூதன் மனிதனே அல்லன் என்கிறது யூத இலக்கியமான மிஷ்னா
(ஆதி. 5:2).
இறைவன் தந்தருளிய 613 கட்டளைகளில் முதன்மையானது
திருமணம் என யூதர்கள் நம்பினார்கள் (ஆதி. 1:28; நீதி. 2:17; 5:18). J ஜெரமியாஸ் என்பவர், பவுல் ஓர் யூதரபி
என்பதைச் சுட்டிக் காட்டி,
அதனால் அவர்
கண்டிப்பாகத் திருமணம் ஆனவர் என்கிறார். பவுல் 1 கொ. 7:3ல் மணமாகாதவர்களுக்கும், கைம்பெண்களுக்கும் என்று
கூறி இருப்பது,
பவுல்
தன்னைத் திருமணம் ஆகாதவர் என்ற நிலையில் கூறாமல், திருமணம் ஆகி, மனைவி இறந்து விட்ட
நிலையில் (widower)
தன்னைக்
காட்டுகின்றார் என்கின்றார்கள். பலர் 1 கொ. 9:5 பகுதியைச்
சுட்டிக்காட்டி பவுல் மறுபடியும் திருமணம் செய்து கொண்டவர் என சிலர்
கருதுகின்றனர். இல்லறத்தில் கணவன் மனைவி உறவு குறிப்பாக அவர்களிடம் ஏற்படும் பால்
உறவு எவ்வித அடிப்படையில் அமைய வேண்டும் என்பது குறித்து பவுல்
நன்கறிந்தவராகக் காணப்படுவதால் அவர் திருமண வாழ்வில் ஈடுபட்டு மனைவியை இழந்த
நிலையில் நற்செய்திப் பணிக்காக மீண்டும் மணந்து கொள்ளாமல் இருந்துவிட்டவர் என்றே
தோன்றுகிறது.
இருப்பினும் பவுல் திருமணமானவரா, ஆகாதவரா என்பது மிக
முக்கியமான பொருள் அல்ல. ஏனென்றால் பவுலைப் புரிந்து கொள்ள இது நமக்குத்
தடைக்கல்லாக இருப்பதில்லை. இருந்தாலும் இப்படிப்பட்டக் கருத்துக்கள் பவுலைப்
பற்றிப் பரவலாகப் பேசப் படுகின்றன என்பதை நாம் அறிந்திருப்பது நல்லது.
Comments
Post a Comment