Skip to main content

Posts

சீரியா, சிசிலியா, தர்சு நகரங்களில் பவுல் - பவுல் வாழ்க்கை வரலாறு (6)

  எருசலேமிலிருந்து தப்பி பவுல் சீரியா , சிலிசியா பகுதிகளுக்குச் சென்றார் (கலா. 1:21-22). இப்பகுதியை பவுல் அடைந்தது கி. பி. 40 ல் , இங்கு நற்செய்திப் பணியாற்றியதோடு , பல ஆண்டுகள் தங்கியுமிருந்தார். ஏறத்தாழ 5 ஆண்டுகள் கி. பி. 40 முதல் 45 வரை இப்பகுதிகளில் தங்கிப் பணியாற்றினார். 2 கொ. 11:25 முதல் உள்ளவசனங்களில் காணப்படும் பாடுகளில் ஒரு சிலவற்றையாவது பவுல் இங்கு அனுபவித்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு. அதன்பின் தனது இருப்பிடமாகிய தர்சு நகரம் சென்றார். பவுல்   தாய்ச்சபையோடு செலவிட்ட நாட்கள் மிகக் கொஞ்சம். தர்சுவில் இருந்த போதும் பவுல் நற்செய்திப்பணி செய்தார். 2 கொ. 12:2-4 ல் உள்ள திருக்காட்சியும் , வெளிப்பாடும் பவுலுக்கு இக்காலத்தில் கிடைத்திருக்கலாம். பவுல் இங்கிருக்கையில் தான் பர்னபாபவுலைத் தேடி தர்சு நகர் வந்தார். இங்கு பவுலைக்கண்டு. அந்தியோகியாவுக்கு அவரை அழைத்து வந்து திருச்சபை மக்களுடன் ஓராண்டு காலம் இருவரும் சேர்ந்து திருப்பணி ஆற்றினார்கள் (அப். 11:25-26).

பவுலின் முதல் எருசலேம் பயணம் - பவுல் வாழ்க்கை வரலாறு (5)

  தமஸ்குவில் தங்கிய பின் பவுல் முதல் முறையாக எருசலேம் நோக்கிச் சென்றார். அங்கு பேதுருவை சந்திப்பதற்காகச் செல்கின்றார். அவருடன் 15 நாட்கள் தங்கி இருந்தார். இக்காலத்தில் எருசலேமில் ஆண்டவரின் சகோதரனாகிய யாக்கோபுவைத் தவிர அப்போஸ்தலர்களில் வேறு எவரையும் சந்திக்கவில்லை என்கிறார் (கலா. 1:18; அப். 9:26). பவுல் எருசலேமில் இருந்தபோது அப் 22:17 ல் சொல்லப்பட்டக் காட்சியைக் கண்டிருக்கலாம். பவுல் எருசலேமிற்குச் சென்ற காலம் கி. பி. 40 எனலாம். பவுல் இங்கிருக்கையில் அரேத்தா மன்னனின் ஆளுநர் பவுலைக் கைதியாக்கி தமஸ்கு நகரின் வாயில்களில் காவலரை வைத்திருந்தான் ( 2 கொ. 11:32). யூதர்களுக்கும் நெபத்தீய மன்னனான அரேத்தாவிற்கும் நெருக்கமான உறவு அப்போது இருந்தது. ஏரோது அந்திப்பா அரேத்தாவின் தங்கையை மணந்திருந்தார் என்று யூதச் சரித்திர ஆசிரியன் ஜோசியஸ் கூறுகின்றார். எனவே பவுலைக் கொல்லத் திட்டமிட்ட யூதர்கள் அரேத்தா மன்னனின் உதவியை நாடினார்கள் (அப். 9 23-25). அரேத்தா மன்னன் கி. பி. 34 க்குப் பின்னர் தான் தமஸ்குவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். எனவே பவுல் கி. பி. 40 ல் எருசலேமிற்கு முதல் முறையாகச் ' சென்றார் என்ற ...

பவுல் தமஸ்குவில் ஆற்றிய பணி - பவுல் வாழ்க்கை வரலாறு (4)

  அரேபியாவில் சிறிது காலத்தைச் செலவிட்ட பின்பு நேரே தமஸ்கு நோக்கிப் பவுல் சென்றார். தமஸ்குவிற்கு இப்போது கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த அல்ல , கிறிஸ்துவை அறிவிக்கச் சென்றார். தமஸ்குவிற்குப் பவுல் சென்ற காலம் கி. பி. 36/37 எனலாம். இங்கு சீடர்களுடன் தங்கி , தொழுகைக் கூடங்களுக்குச் சென்று , கிறிஸ்துவை அறிவித்தார். (அப். 9:20-22) அப்போஸ்தலர் நடபடிகள் நூலின்படி " பல நாட்கள் " மட்டுமே பவுல் இங்கு தங்கினார் (அப் , 9:23), ஆனால் பவுலின் நிருபத்தின்படி மூன்று ஆண்டுகள் தங்கினார் (கலா. 1:18). இதில் பவுல்  குறிப்பிடுவதே சரியெனக் கொள்ளலாம். ஏனென்றால் பவுல் எருசலேம் செல்லாமல் , தமஸ்குவிலேயே மூன்று ஆண்டுகள் தங்கி இருந்ததால் தான் யூதேயாவிலிருந்த கிறிஸ்தவ திருச்சபை மக்கள் பவுலை அப்போதும் அறிந்துகொள்ள இயலாமல் , இருந்தார்கள் (கலா. 1:22-23). எனவே பவுல் தமஸ்குவில் இருந்த காலம் மூன்று ஆண்டுகள் என்றும் , அது கி. பி. 37-40 என்றும் குறிக்கலாம். பவுல் தமஸ்குவில் இருந்தபோது , அல்லது அரேபியாவின் பாலைவனப் பகுதிகளில் எசனேயர்களை அல்லது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட எசனேயர்களைச் சந்தித்து இருக்கலாம் என்பதை பவ...

பவுலின் அரேபியா அனுபவம் - பவுல் வாழ்க்கை வரலாறு (3)

    பவுலின் தமஸ்கு அனுபவத்திற்குப்பின் , உடனே அரபி நாட்டிற்குச் சென்றார். (கலா. 1:17) இதுபற்றி அப்போஸ்தலர் நடபடி.கள் நூல் எதுவும் குறிப்பிடவில்லை . பவுல் அரேபியாவில் எவ்வளவு காலம் இருந்தார் என்ற குறிப்பை எங்கும் காணமுடியதில்லை. இருப்பினும் பவுல் இங்கு குறுகிய காலம் இருந்தார் என்று கருதலாம். குறுகிய காலமானதால் தான் லூக்கா அதைப் பெரிதுபடுத்தாமல் தனது நூலாகிய அப்போஸ்தல நடபடிகள் நூலில் விட்டுவிட்டார் என்று நினைக்க இடமுண்டு. பவுல் ஏன் அரேபியாவிற்குச் சென்றார் என்பதைப் பற்றியும் விளக்கமான குறிப்புகள் இல்லை. ஆனால் பலர் இதைப்பற்றிப் பலவிதமான விளக்கங்களைக் கூறுகின்றார்கள். பவுல் தனது எதிர் காலப் பணியைப் பற்றியும் , அதை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதைப்பற்றியும் சிந்திப்பதற்காக அங்கு சென்றார் என்றும் , அரேபியாவின் மக்களுக்கு இயேசுவைப் பிரசங்கிக்கச் சென்றார் என்றும் , நியாயப்பிரமாணம் வழங்கப்பட்ட சீனாய் மலை அரேபியாவின் பாலைவனத்தில் இருந்ததால் , நியாயப்பிரமாணம் இயேசுவில் தன் முடிவைக் கண்டு விட்டது என்ற கருத்தைக் சொல்லுமுன் , அம்மலையை ஓர் முறை காணச் சென்றார் என்றும் பல விளக்கங்கள் கூறப்...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பலஸ்தீனா யூதப்பின்னணியம் (பவுல் பயன்படுத்திய இறையியல் மூலங்கள்)

  இனி பவுலுக்கு அவரது இறையியலைக் தட்டி எழுப்ப பலஸ்தீன யூதப் பிண்ணனியம் எவ்வாறெல்லாம் உதவியது என்பதனைக் காண்போம். பவுலின் யூதப் பின்னணியத்தை அறியுமுன் அவர் எப்படிப்பட்ட யூதன் என்பதை அறிதல் நன்று. ஏனென்றால் அவரது யூதத்  தன்மையை அறியும் போது தான் அவர் எந்த அளவு தன் சொந்த சமயத்தில் அக்கறையும் ஆர்வமும் காட்டினார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். தான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்னும் கூட பவுல் தன்னை ஓர் யூதன் என்று அழைத்துக் கொள்வதிலேயே பெருமைக் கொள்கின்றார் (அப். 21:39; 22:3). திரும்பத் திரும்ப தனது யூதத் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுகின்றார் ( 2 கொ. 11:22 ரோ. 11:1). தான் ஒரு இஸ்ரவேலன் ( 2 கொரி. 11:22; ரோ. 11:1), எபிரேயருக்கு பிறந்த எபிரேயன் திருச் சட்டத்தை கடைப்பிடிப்பதில் பரிசேயன் (பிலி. 3:6 காண்க. அப். 23:6 26:5 காண்க. கலா . 1:14) யூத ரபிகளுக்கெல்லாம் தலை சிறந்த கமாலியேலிடத்தில் ரபிகளுக்குரிய கல்வியையும் பயிற்சியையும் பெற்றவர் (அப். 22:3) யூதப் பாரம்பரியத்தில் அளவு கடந்த ஆர்வம் மிக்கவர் , யூதருக்குள் அவருடைய வயதுடையோரில் பலரை விட மேம்பட்டவர் (கலா. 1:14) நீதிச் சட்டத்தின்படி ...

பவுலின் யூதப் பின்னணியம் (பவுல் பயன்படுத்திய இறையியல் மூலங்கள்)

  பவுலின் இறையியலில் பல பின்னணியங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் யூதப் பின்னணியமே விஞ்சி நிற்கின்றது என்பது தெளிவு. பவுல் வாழ்ந்த காலத்தில் யூதர் , யூதரல்லாதார் என இரு சாரார் வாழ்ந்து வந்தனர். இவர்கள் சமய , சமூக அற நெறிகளைப் பொறுத்தமட்டில் வேறு பட்டிருந்தாலும் ஒருவரிடமிருந்து ஒருவர் பல காரியங்களைப் பகிர்ந்துக் கொண்டிருந்தனர் என்பது மறுக்கப்படாத உண்மை. மக்கபேயர் காலத்தில் நடைபெற்ற மக்கபேயர் போர் அன்னியர்களான சீரியர்களை எதிர்ப்பதற்காகவும் , அதே நேரத்தில் புறவினச் சமயங்களின் கலாச்சாரத்தையும் , முறைமைகளையும் ஏற்க முனைந்த யூதர்களுக்கு எதிராகவும் நடந்த யூதப்போர் என்றால் மிகையாகாது. சைரஸ் எச். கோர்டன் ( Cyrus H. Gordon) என்பவர் தாம் எழுதிய Before the Bible என்ற நூலில் இவற்றை தெளிவாக விளக்கிக் காட்டியிருக்கின்றார். ' சனகரிம் ' என்ற கிரேக்கச் சொல்லால் தான் யூதர்களின் தலைமைப் பேரவையே அழைக்கப்பட்டது. பரூசீயர் , என்ற கிரேக்கச் சொல்லை எடுத்து அதன் மூலம் யூதக்கருத்து வெளிப்படுத்தப்பட்டது. என்கிறார் டுபோண்ட் ( Dupont). யூத இலக்கியமான தால்மூத் - ல் 1100 க்கு மேலான கிரேக்கச் சொற்கள் பயன்ப...

யூதப் பின்னணியமா? கிரேக்கப் பின்னணியமா? - ஓர் வாதம் (பவுல் பயன்படுத்திய இறையியல் மூலங்கள்)

  பவுலின் இறையியலுக்குரிய பின்னணியங்களைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஒரு சிலர் பவுலின் இறையியலுக்கு பலஸ்தீனா யூதப் பின்னணியம் மட்டுமே முற்றிலும் துணை புரிந்தது என்கின்றார்கள். இப்படிக் கூறுவதில் D. E H ஒயிட்லியும் ஒருவராவார். வான் உன்னிக் ( van Unnik) என்பவர் , பவுலின் பின்னணியம் தர்சு அல்ல எருசலேமே என்கிறார். ஆனால் புல்ட்மான் என்பவரும் , மோன்டிபயர் என்ற யூத அறிஞரும் , பவுலின் கிரேக்கப் பின்னணியத்தை வலியுறுத்துகின்றார்கள். புல்ட்மான் என்பவர் , பவுல் வாழ்ந்த தர்சுவும் , அங்கு நிலவிய கலப்புச் சமயக் கருத்துக்களும் , கிரேக்கக் கலாச்சாரமும் பவுலின் பின்னணியம் என்கிறார் . புல்ட்மான் பவுலின் கிரேக்கப் பின்னணியத்தை வலியுறுத்தினாலும் , பவுல் கிறிஸ்துவை ஏற்குமுன் எந்த அளவிற்கு கிரேக்கச் சமயக் கருத்துக்களை அறிந்திருந்தார் என்பதைத் திட்டமாகக் கூறமுடியாது என்கிறார். மேலும் பவுலின் நிருபங்களை நோக்கினால் , அவர் பலஸ்தீனா யூதச் சமயத்தினின்று மிகக்குறைவான அம்சங்களையே எடுத்தாண்டிருக்கின்றார் என்பது விளங்கும் என்கிறார். ஆனால் W. D. டேவிஸ் என்பவர். பவுலுக்கு யூதப் பின்னணி...

பவுல் பயன்படுத்திய இறையியல் மூலங்கள் - அறிமுகம்

  பவுலின் இறையியலை அறியவேண்டுமானால் அவரது இறையியலை நிறுவ அவருக்குத் துணை செய்த மூலங்களை அறியவேண்டும் . இயேசுவையும் , அப்போஸ்தலர்களையும் பற்றி அறிய யூதச் சிந்தனையை மட்டும் அறிந்தால் போதும். ஏனென்றால் இவர்கள் யூதர்களாக , யூதர்களிடையே யூதச்சிந்தனையின் அடிப்படையில் பணியாற்றினார்கள். ஆனால் பவுல் இவர்களைவிட வித்தியாசமானவர். பவுல் யூதராயிருந்தும் , வேறுபட்ட சூழல்களில் அதாவது கிரேக்க யூதச்சமயத்தினருக்கும் , யூதரல்லாத புறவினத்தவருக்கும் அவர்களுக்கே தெரிந்த , புரிந்த மொழியில் , சிந்தனையின் அடிப்படையில் அப்போஸ்தலனாய்ப் பணியாற்றினார். இதனால் பவுலைப் புரிந்து கொள்ள அவர் யாரிடம் பேசினார் , என்ன பேசினார் , ஏன் அவ்வாறு பேசினார் , என்ன உள் கருத்துடன் பேசினார் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண வேண்டும். பவுல் இனத்தால் யூதனாக , அதுவும் ஆர்வமிக்க யூதனாக இருந்ததால் அவரது யூத பின்னணியத்தையும் , கிரேக்க பண்பாடு , கலாச்சாரம் , கல்வி , சமயங்கள் , தத்துவக் கோட்பாடுகள் நிறைந்த சிசிலியா நாட்டுத் தர்சு நகரில் பலகாலம் வாழ்ந்தால் அவரது கிரேக்கப் பின்னணியத்தையும் , மனமாற்றத்திற்குப் பின் கிறிஸ்தவர்களுடனும் , தி...

யூதரல்லாதோரிடையே பவுலின் பணி (பவுலின் நற்செய்திப் பணி)

  பவுல் தன் மனமாற்றத்தைத் தொடர்ந்து நற்செய்திப் பணி செய்தார். தான் யூதரல்லாதோரின் அப்போஸ்தலன் என்று பவுல் கருதினாலும் , முதலில் யூதர்களிடமே அவர் பணியாற்றினார் மன மாற்றத்திற்குப் பின் தமஸ்குவில் நற்செய்திப் பணியை முதலில் யூதர்களிடமே கூறினார் (அப். 9:19-22). அவர் சென்ற மூன்று நற்செய்திப் பயணங்களிலேயும் கூட முதலில் யூதர்களின் தொழுகைக்கூடங்களுக்கே சென்று போதித்தார் (அப். 13:5-14; 14:1; 17:10, 10, 17; 18:4, 19; 19:8). யூதர்கள் அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளாத போதுதான் , யூதரல்லாதாரிடையே சென்று பணியாற்றினார். இதனடிப்படையில் , “ யூதரிடையே தனக்கு வரவேற்பு இல்லை என்றும் , அதே நேரத்தில் யூதரல்லாதாரிடையே தனக்கு வரவேற்பு இருக்கிறது என்பதையும் உணர்ந்த பவுல் தன்னை யூதரல்லாதாரின் அப்போஸ்தலனாகப் பறை சாற்றிக் கொண்டார் ” என்று சிலர் எண்ணுகின்றார்கள். இது உண்மையாயினும்கூட , பவுலை முற்றிலும் யூதரல்லாதாரின் திருப்பணியாளன் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் யூதர்களை பவுல் ஒரு நாளும் வெறுக்கவே இல்லை. யூதர்களின் மீட்பைப் பற்றிய ஆர்வத்தை அவர் இழக்கவே இல்லை. கடவுளின் திட்டப்படி எல்லா இஸ்ரவேலரும் கடைசியில் ம...