Skip to main content

Posts

யூதரல்லாதோரின் நற்செய்தித் தொண்டன் (பவுலின் நற்செய்திப் பணி)

  தாயின் வயிற்றில் இருந்தபோதே தன்னை யூதரல்லாதோரின் அப்போஸ்தலனாகப் பணி புரிய கடவுள் திட்டமிட்டுத் தன்னைத் தெரிந்துக் கொண்டார் என்ற உள்ளுதல் பவுலுக்கு இருந்தது (கலா ; ]: 15, 16). இயேசு மற்ற அப்போஸ்தலர்களுக்குக் காட்சி தந்து அவர்களைத் திருப்பணிக்காக அழைத்தது போன்றே (காண்க . மத். 28:9-10, 16-20; மாற். 16:14-18; லூக். 24:13-35, 36. 43; யோ . 20:19-29, 21:1-23, அப். 1:3-9) தனக்கும் இயேசு காட்சி தந்து , யூதரல்லாதாரிடையே நற்செய்திப் பணிபுரிய தன்னை அழைத்தார் என்று பவுல் நம்பினார். யூதரல்லாதாரிடம் சென்று கடவுளின் பெயரை அறிவிக்கும் கருவியாக பவுல் தன்னைக் கருதினார் (அப். 9:15; 26:18). தமஸ்கு பாதையில் அருட்செய்தியின் தொண்டனாக இருக்க அழைப்பை மட்டுமன்றி , அப்பணியை நிறைவேற்றுவதற்குரிய செய்தியும் தனக்கு அருளப்பட்டதாகப் பவுல் குறிப்பிடுகின்றார் (கலா. 1: 12:2, 7; 1 தெச 2:4; ரோ. 1:1; 15:15 1 கொ . 1:17), அருட்செய்தியின் அறிவிப்பைத் தானாகத் தெரிந்து கொள்ளவில்லை , அது தன் மேல் விழுந்த கடமை , அருட்செய்தியை அறிவிக்காவிட்டால் தான் அழிந்தே போவேன் என நம்பினார் ( 1 கொ 9:16 மு. ; ரோ. 15:16) 1 கொ. 3:10. 2 கொ...

பவுலின் நற்செய்திப் பணி - அறிமுகம்

  தமஸ்கு நிகழ்ச்சியின் மூலம் பவுல் தன் அழைப்பை உணர்ந்து ஆண்டவர் இயேசுவின் அருட்தொண்டனானார். பவுல் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர் நற்செய்திப் பணியில் ஈடுபட்டார். அவர் கிறிஸ்துவை ஏற்கும் முன்னர் யூதச் சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். பவுலின் காலத்தில் சமயப்பரப்புப் பணி உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது (காண்க. மத் , 23:15) யூதச் சமயமும் , கிரேக்கச் சமயமும் இம்முயற்சியில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்தன என்கிறார் J. எரேமியாஸ் என்ற அறிஞர். தர்சுவில் வாழ்ந்த ஆர்வ ' மிக்க யூதனான பவுலும்கூட இப்பணியில் ஈடுபட்டிருந்தார் என நம்ப இடமுண்டு. யூதச் சமயத்திற்கு எதிராகக் கிளப்பிய கிறிஸ்தவத்தைக் கிள்ளி எறிய பவுல் நீண்ட நெடும் பயணங்களைத் தொடர்ந்ததும் , தமஸ்கு நிகழ்ச்சிக்குப் பின் அருட்செய்திப் பணியில் பவுல் ஈடுபட்ட தும் , இதற்கு முன்னும் பவுல் யூதச் சமயப் பரப்புப் பணியைச் செய்திருந்தார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. கலா. 5:11 ன் அடிப்படையில் , புல்ட்மான் , போர்ன்காம் , ஹேங்கல் போன்ற அறிஞர்கள் , கிறிஸ்தவன் ஆவதற்கு முன்னரேயே சமயப்பரப்புப் பணியில் பவுல் ஈட...

தமஸ்கு நிகழ்ச்சியின் விளைவு (பவுலின் வாழ்க்கை)

  தமஸ்கு அனுபவம்தான் பவுலின் ஆள் தன்மைக்கும் , வாழ்க்கைக்கும் , இறையியலுக்கும் காரணமாய் அமைந்தது. இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே பவுல் தனது இறையியலைக் கட்டி எழுப்புகின்றார். பவுலின் இறையியல் இயேசுவின் சிலுவை - உயிர்ப்பு - விண்ணேற்றம் ஆகியவைகளோடு துவங்குவது குறிப்பிடத்தக்கது. பவுல் தாம் எல்லாவற்றையும் தமஸ்கு பாதையிலேயே கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றார் (கலா. 1:12). ஆயினும் தமஸ்கு பாதையில் ஏற்பட்ட வெளிப்பாட்டிலேயே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டார் என்பதைவிட , தமஸ்கு வெளிப்பாடு போன்ற பலவெளிப்பாடுகள் வாயிலாகப் பவுல் பலவற்றைக் கற்றுக் கொண்டார் என்று நினைக்கவும் இடமுண்டு (அப். 22:17; 2 கொ. 12). இதோடு கூட , பவுல் அரேபியாலில் தனிமையிலும் , ( கலா. 1: 17) தமஸ்குவில் சீடர்களோடும் (அப். 9 : 20 மு) , எருசலேமில் அப்போஸ்தலர்களோடும் (கலா. 1:8) தங்கி இருந்தபோதும் பல காரியங்களைத் தெரிந்து கொண்டார் என்று கூறலாம். இவர்களிடமிருந்து அறியுமுன் , தான் துன்புறுத்திய கிறிஸ்தவர்களிடத்திலிருந்து பவுல் பல காரியங்களைப் பற்றி அறிந்திருந்தார் என்பதும் உண்மையே (அப். 26:11) . தமஸ்கு அனுபவம் பவுலின் இறையியலில் ஏற்பட...

தமஸ்கு நிகழ்ச்சி - ஓர் ஆய்வு (பவுலின் வாழ்க்கை)

  பவுலும் , ஏனையோரும் தமஸ்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது , உயிர்த்த இயேசு கிறிஸ்து பவுலைச் சந்திக்கின்றார். கிறிஸ்துவும் பவுலும் முகமுகமாய்ப் பேசிக் கொண்ட இவ்வனுபவத்தைப் பவுல் தனது கடிதங்களில் கடவுளின் வெளிப்பாடு (கலா. 1:16) என்றும் , புதிய படைப்பு ( 2 கொ. 5:17) என்றும் , திருக்காட்சி ( 1 கொ. 15:8) என்றும் விமர்சிக்கின்றார். பவுலின் தமஸ்கு அனுபவத்தைப்பற்றி சிலர் பல்வேறு கருத்துக்களை , ஐயங்களை எழுப்புகின்றனர். முதலாவது பரலோகத்திற்குச் சென்ற கிறிஸ்து பவுலுக்குக் காட்சி தந்திருக்க முடியாது என்று கூறி , பவுல் இயேசுவைச் சந்திக்கவும் இல்லை. பேசவும் இல்லை என்கின்றார்கள். இரண்டாவது பவுலின் தமஸ்கு அனுபவம் வெளிப்படையாக நடந்த ஒரு செயல் அன்று , அது பவுலுக்கு ஏற்பட்ட உள்ளான அனுபவம் மட்டுமே ( Subjective internal rather than objective). மூன்றாவது பவுலின் அனுபவம் உளவியல் சார்ந்தது. ஸ்தேவான் பொறுமையாக மரணத்தை ஏற்று இரத்த சாட்சியாக மரித்ததையும், கிறிஸ்தவர்கள் துன்பத்திலும் பொறுமையோடு உறுதியாய் நம்பிக்கையில் நிலைத்திருப்பதையும் கண்ட பவுல் , அதை பற்றியே தனது மனதில் சிந்தித்து , ஏன் இ...

பவுல் திருச்சபையை துன்புறுத்துதல் (பவுலின் வாழ்க்கை)

  யூதச் சமயத்தினின்று புதிய கிளையாகத் தோன்றிய கிறிஸ்தவத்தை முளையிலேயே கிள்ளி எறிய விரதங்கொண்டவராகப் பவுல் தமஸ்கு நோக்கிச் சென்றார். மேசியா என்று ஒருவரை அறிவித்ததால் யூதர்கள் அல்லது பவுல் ஆத்திரப்பட்டிருக்கமாட்டார்கள். ஏனென்றால் பலர் மேசியாவாக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்கள். யூதர்களில் பலர் அவர்களை நம்பவும் செய்திருக்கின்றார்கள். கி பி. 132 ல் தலை சிறந்த ரபியான -- R. அகீபா ( R. Akiba) என்பவர் பார் கொக்பா என்பவரை மேசியாவாக அறிவித்தார். இப்படிப் பல சூழல்களில் நடத்திருக்கின்றது. ஆனால் மரத்திலே தூக்கி போடப்பட்ட , சாபத்துக்குரிய ஒருவரை மேசியா என்று கிறிஸ்தவர்கள் அறிவித்தது தான் பவுலுக்கு அதிக ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதோடு மேசியாவை ரோமர்களின் கையில் ஒப்புக்கொடுத்து சாகடிப்பதும் யூதர்களுக்கு ஒவ்வாத செயல் (அப். 5. 30 மு ; 10:39 மு ; 13:29 மு). அப். 5:30; 10:39; 13:29; 1 பேது. 2:24 ஆகிய பகுதிகள் ஆரம்ப முதற்கொண்டே யூதர்கள் கிறிஸ்தவர்களை உபா. 21:23 ன் அடிப்படையில் துன்புறுத்தியிருக்கவேண்டும் என்பதைச் சுட்டுகின்றன. யோ. 16:2 , 1 கொ. 12:3 ல் “ இயேசு ஒழிக" என்ற குரல் யூதர்கள் கிறிஸ்தவர்கள...

தமஸ்கு அனுபவத்திற்கு முன் பவுல் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் தமஸ்கு அனுபவத்திற்கு முன் பவுல் எப்படிப்பட்டவராய் வாழ்ந்தார் என்பதைச் சிந்தித்தால் தான் தமஸ்கு அனுபவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்.  பவுல் தனது மனமாற்றத்திற்கு முன் வைராக்கியமுள்ள யூதனாக வாழ்ந்து வந்தார். இந்த வைராக்கியம் அவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்பும் அவரில் காணப்பட்டது என்றால் மிகையாகாது. பவுல் யூதரல்லாதாரிடையே வாழ்ந்திருந்தாலும் , யூதச் சமயத்தின் தலையாயக் கோட்பாடாகிய ஓரிறைக் கோட்பாட்டில் (monotheism) அசையாத நம்பிக்கை உடையவராகவே இருந்தார். (கலா. 3:20; ரோ. 3:30). இந்த நம்பிக்கையின் விளைவாக பிறவினச் சமயங்களையும் , அவைகளுக்குரிய வழிபாடுகளையும் ( 1 கொ. 10:14, 21). அச்சமயங்களுக்குரிய இழிவான ஒழுக்கக்கேடுகளையும் வன்மையாக எதிர்த்தார் (ரோ. 1:25 மு). யூதத் திருமறையையும் (ரோ 1:20;4:3) மோசேயின் மூலம் அருளப்பட்ட நியாயப்பிரமாணத்தையும் (ரோ. 7:12, 14, 16, 22; 3:21) யூதர்களின் பாரம்பரியத்தையும் (கலா. 1:14) அதிகமாக மதித்தார். யூத இலக்கியமான தால்மூட் என்ற நூலில் (பெராகோத். 9:7 மு) எழுவகைப் பரிசேயர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் தலைசிறந்த ஏழாவது வகையைச் சேர்ந்தவர் ...

பவுலின் தமஸ்கு அனுபவம் (பவுலின் வாழ்க்கை)

  பவுல் தமஸ்குவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தவும் , அவர்களைக்கட்டி எருசலேமிற்குக் கொண்டு வரவும் தலைமை ஆசாரியனிடம் அதிகாரப்பத்திரம் வாங்கிக் கொண்டு , தமஸ்கு நோக்கிச் செல்கையில் உயிர்த்த கிறிஸ்து பவுலைச் சந்தித்தார். இந்நிகழ்ச்சி பவுலின் வாழ்க்கையில் எண்ணத்தில் , நோக்கத்தில் பெரிய மாற்றத்தையே உண்டாக்கியது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டமைக்காக கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தச் சென்ற பவுல் , கிறிஸ்துவுக்காகத் துன்பப்படத் தன்னைத் தமஸ்கு பாதையில் அர்ப்பணித்தார். (அப். 9:1-22) தமஸ்கு பயணத்தின் போது தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான் உருவாக்கிய திருச்சபைகளில் பாதிக்கு மேலான சபைகளுக்குத் தெரிவிக்கின்றார். (கலா. 1:11-17; 1 கொ 9:1; 15:8; பிலி. 3:6-7) ஆகிய பகுதிகளில் நேரடியாகத் தன் மனமாற்றத்தை அல்லது தனக்குக் கிடைத்த அழைப்பைப் பற்றிப் பேசுகின்றார். இதோடு ரோ. 10:2-4; 1 கொ. 9:16-17; 2 கொ . 3:4-4:6, 5:16; எபே. 3:1-13 கொலோ. 1:23-29; 1 தீமோ. 1:11-14 ஆகிய பகுதிகளிலேயும் கூட பவுல் தன் மனமாற்றத்தைப் பற்றிக் கூறுகின்றார் என்று செயூன் கிம் போன்ற அறிஞர்கள் கருதுகின்றார்கள். ஒருவேளை நேரடியாக பேசாவிட்டாலும்...

பவுல் திருமணமானவரா? (பவுலின் வாழ்க்கை)

  பவுல் திருமணமானவரா , ஆகாதவரா என்பது இன்றும் பிரச்சனையாகவே இருக்கின்றது. பவுல் யூத ரபியாக ஆகியிருந்தால் கண்டிப்பாக அவருக்குத் திருமணமும் ஆகியிருக்கவேண்டும். ஏனென்றால் யூத ரபி கண்டிப்பாகத் திருமணம் செய்ய வேண்டும் என்பது யூத நியதி. மனைவி இல்லாத யூதன் மனிதனே அல்லன் என்கிறது யூத இலக்கியமான மிஷ்னா (ஆதி. 5:2). இறைவன் தந்தருளிய 613 கட்டளைகளில் முதன்மையானது திருமணம் என யூதர்கள் நம்பினார்கள் (ஆதி. 1:28; நீதி. 2:17; 5:18). J ஜெரமியாஸ் என்பவர் , பவுல் ஓர் யூதரபி என்பதைச் சுட்டிக் காட்டி , அதனால் அவர் கண்டிப்பாகத் திருமணம் ஆனவர் என்கிறார்.   பவுல் 1 கொ. 7:3 ல் மணமாகாதவர்களுக்கும் , கைம்பெண்களுக்கும் என்று கூறி இருப்பது , பவுல் தன்னைத் திருமணம் ஆகாதவர் என்ற நிலையில் கூறாமல் , திருமணம் ஆகி , மனைவி இறந்து விட்ட நிலையில் ( widower) தன்னைக் காட்டுகின்றார் என்கின்றார்கள் . பலர் 1 கொ. 9:5 பகுதியைச் சுட்டிக்காட்டி பவுல் மறுபடியும் திருமணம் செய்து கொண்டவர் என சிலர் கருதுகின்றனர். இல்லறத்தில் கணவன் மனைவி உறவு குறிப்பாக அவர்களிடம் ஏற்படும் பால் உறவு எவ்வித அடிப்படையில் அமைய வேண்டும் என்பது ...

பவுலின் அறிவாற்றல் (பவுலின் வாழ்க்கை)

  பவுல் ஒரு பன்மொழிப் புலவர் என்றால் அது மிகையாகாது. பவுல் ஒரு யூதனாக , அக்காலப் பேச்சு மொழியான அரமேயத்தைக் கற்றுப் பேசினார் என்பதில் ஐயப்பட அவசியமில்லை. தமஸ்கு பாதையில் இயேசுவும் பவுலும் அரமேய மொழியிலேயே தொடர்பு கொண்டார்கள் என்பது பல அறிஞர்களின் கருத்து. காரணம் அரமேய மொழிதான் இயேசுவும் , பவுலும் வாழ்ந்த காலத்தில் யூதர்களுக்குப் பேச்சு மொழியாக இருந்தது. பவுல் தன்னை ' எபிரேயன் ' ( பிலி. 3:5) என்று அழைப்பதின் நோக்கம் , தனக்கு அரமேய மொழியும் , பலஸ்தீனாவின் கலாச்சாரமும் தெரியும் என்று காட்டவே என்கிறார் செயூன் கிம் என்ற அறிஞர் C. F. D. மோல் என்ற அறிஞர். பவுல் தன்னை எபிரேயன் என்று குறிப்பிடுவதன் நோக்கம் யாதெனில் , தான் ஒரு கிரேக்க மொழி பேசும் யூதன். ஆனாலும் தனக்கு அரமேய மொழியும் தெரியும் என்பதைச் சுட்டிக் காட்டவே என்கிறார். பவுலின் எதிரிகளான கிரேக்க யூதர்கள் எருசலேமில் இருந்த போது அரமேயத்தையும் கற்றிருந்தார்கள். இவர்கள் திரும்பவும் தங்கள் சொந்த நாட்டிற்கு வந்தபோது. தாங்கள் அரமேய மொழியைக் கற்றிருந்ததன் அடிப்படையில் தங்களை எபிரேயர்கள் என அழைத்துக் கொண்டார்கள். ஆனால் பவுலையோ குறைத...

பவுலின் தொழில் (பவுலின் வாழ்க்கை)

  யூத ரபிக்குரிய சமயக் கல்வியைக் கற்றிருத்த பவுல் , யூத ரபியாக இருக்கவேண்டுமானால் தெரிந்திருக்க வேண்டிய ஓர் தொழிலையும் அறிந்திருந்தார். ரபி R. யோகன்னான் என்பவர் , ஒருவன் தன் தந்தையின் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலைத் தெரிந்து கொள்ளக் கூடாது என்கிறார். இதன்படி பார்த்தால் , பவுலின் தந்தையின் தொழிலையே பவுல் செய்திருக்கவேண்டும். அதாவது பவுலின் தந்தையும் பவுலைப்போன்று கூடாரம் செய்யும் தொழிலைச் செய்திருக்கவேண்டும் (அப். 18:3; 20:34; 1 கொ. 9:12). ஆனால் கிறிசொஸ்தம் என்ற திருச்சபைப் பெரியார் , பவுலின் தந்தைத் தோல் பதனிடும் தொழிலைச் செய்தார் என்கின்றார். இருப்பினும் , தீவிர பரிசேயனும் , பக்திமிக்கவருமான பவுலின் தந்தை இத்தொழிலைச் செய்தார் என்பது ஐயத்திற்குரியதாக இருக்கின்றது. த. பா. ஹட்சன் என்பவர் தர்சுவில் சிலிசியா என்ற அந்த இடத்தின் பெயரால் '' சிலிசியம்" என்றழைக்கப்பட்ட கூடாரத் துணிகளுக்காக உபயோகிக்கப்படும் வெள்ளாட்டு மயிர் வணிகம் நடந்து வந்தது என்று கூறி , இதனால் பவுலின் தந்தை வெள்ளாட்டு மயிர் வியாபாரமோ அல்லது வெள்ளாட்டு மயிரினால் தயார் செய்யப்பட்ட கம்பளத்துணி வியாபாரமோ செய்தவர...

பவுலின் சமயக்கல்வி (பவுலின் வாழ்க்கை)

  பவுல் யூதச் சமயக்கல்வியைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்தவர் ( அப் 26:24). இக்கல்வியைத் தலை சிறந்த பேராசிரியராகிய கமாலியேலிடம் திட்ப நுட்பமாகக் கற்றார் (பிலி 3:5 கலா. 1:14). கமாலியேல் என்பவர் (அப். 22:3). யூதச் சமயக்குழுக்களில் ஒன்றாகிய ஹில்லேல் ( Hillel) கழகத்தை உருவாக்கியவராகிய ஹில்லேல் என்பவரின் பேரன். கமாலியேலின் தந்தையின் பெயர் சிமியோன். யூத ரபிகளுக்குள்ளே எழுவருக்கு மட்டும் தான் யூதர்கள் “ ரப்பான் ” என்ற உயர்ந்த மதிப்புமிகுந்த பட்டத்தைக் கொடுத்திருந்தார்கள். அவர்களில் ஹில்லேல் , அவரது மகன் சிமியோன். அவரது மகன் கமாலியேல் ஆகிய மூவரும் இடம் பெறுகின்றார்கள். ஆகவே பவுலின் பேராசிரியரைப் போல் , பவுலும் அறிவில் தேர்ந்தவராக விளங்கினார் ( 2 கொ. 6:11). அப்போஸ்தல நடபடிகள் நூல் , எருசலேமில் கமாலியேலினிடத்தில் பவுல் சமயக் கல்வியைக் கற்றார் என்று கூறினாலும் (அப். 22:3; அப். 26:4), புல்ட்மான் போன்ற அறிஞர்கள் இதை மறுக்கின்றார்கள். இவர்கள் பவுல் தர்சு நகரிலேயே தனது சமயக் கல்வியைக் கற்றார் என்கின்றார்கள். ஏனென்றால் இவர்களின் கருத்துப்படி , பவுல் தனது மனமாற்றத்திற்குப்பின் எருசலேம் போகவில்லை (க...